பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - விருச்சிகம்
விடாமுயற்சியும், பிடிவாதப் போக்கையும் கொண்டிருக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு யோகாதிபதி சந்திரன் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பஞ்சம ஸ்தானத்தை பார்ப்பது உங்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருளாதார நிலையில் வளம் பெறுவீர்கள். தனஸ்தானத்தில் ராசிநாதனுடன் லாபாதிபதி இணைவு பெறும், விரயாதிபதி சுக்கிரன் இவர்களுடன் சேர்வது தொழிலிலும், பணியிலும் உங்களின் உழைப்பு சிறப்பாக அமையும். சிலருக்கு உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். புத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்து வெளிநாட்டு தொடர்புகளிலும், தொழில் சார்ந்த தொடர்புகளும் உங்களுக்கு உண்டாகும். உங்களின் புத்திரருக்கு திருமண முயற்சிகள்.. நன்மை தரும். தாயார் உடல் நலனில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டி வரும். கலைதுறையினருக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும். சிறு சிறு தடைகள் தாண்டி வருவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
18-02-2024 ஞாயிறு இரவு 02.07 முதல் 21-02-2024 புதன் காலை 10.15 மணி வரை.
நட்சத்திர பலன்கள்:-
விசாகம் 4ம் பாதம்:
திடமான நம்பிக்கை வைத்து காரியங்களை செயல்படுத்துவீர்கள். உங்களின் முக்கிய விடயத்தை சிலரின் உதவி மூலம் செயல்படுத்துவீர்கள்.
அனுஷம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
உடல் நலனில் கவனம் செலுத்தி வரவேண்டி இருக்கும். பணிபுரியுமிடத்தில் அதிக வேலை பளு காரணமாக அடிக்கடி அசதி உண்டாகும்.
கேட்டை 1. 2, 3, 4 ஆம் பாதங்கள்:
கலைதுறையினருக்கு வெளியூர் அடிக்கடி சென்று வரவேண்டி வரும். தோல் சம்மந்தமான உடல் உபாதைகள் உண்டாகும். பணபுழக்கம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஒரஞ்சு, பச்சை, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், புதன், வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமையில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும், செவ்வாய் கிழமை சுப்ரமணியருக்கு இலுப்பெண்ணெயை தீபமும் ஏற்றி வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.